கொழும்பு – யாழ் ரயிலில் மோதுண்டு வவுனியாவில் 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30மணியளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கற்குழியில் வசித்து வரும் பாடசாலை மாணவனான எஸ். சுபலோசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த தினம் குடும்பதாருடன் சிறு கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறி சென்றுள்ளார்.
பின்னர் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.