போதனாசிரியர்களுக்கு வடக்கு ஆளுனரினால் நியமனங்கள் வழங்கி வைப்பு!!

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனாசிரியர்கள் ஐவருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெயினோலட்குரே இன்று (05)வழங்கி வைத்தார்.யாழ்ப்பாணம் சுண்டுககுளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் காலை 8.30 மணியளவில் குறித்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், முலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம், கிராம அபிவிருத்தி திணைக்கள பதில்பணிப்பாளர் நளாயினி இன்பராஜ்ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.