இளம்பெண் அடித்துக்கொலை…. உயிருக்கு போராடும் கணவர்!… நடந்தது என்ன?

சென்னை வடபழனியில் பெண்ணை கொலை செய்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அரச்சகர் பிரபு என்பவர் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இன்று அவரது வீட்டு கழிவறையில் பிரபுவின் மனைவி பிரியா தலையில் படுகாயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் செய்த ஆய்வில் பிரியா உயிரிழந்தது தெரியவந்துது.

அதனையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வீட்டிலுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகேயுள்ள கண்காணிப்பு கமெராக்காளை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனனர்.பிரபு தம்பதிக்கு நன்கு அறிமுகமானவர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.