டிப்பர் ரக வாகனம் மோதி 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி..!! (CCTV காணொளி)

சூரியவெவ நகரில் டிப்பர் ரக வாகனமொன்றில் மோதி உந்துருளியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சூரியவெவ மஹபெலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே ;குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சூரியவெவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் டிப்பர ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விபத்து அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.