இன்று தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி , நாளை மதியம் 12.12 மணிக்கு அளுத்கம ,மீகஹதென்ன , சூரிய கந்த மற்றும் செல்ல கதிர்காமம் போன்ற பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதேவேளை , நாளை தொடக்கம் நாட்டின் தென் , மேல் , சப்ரகமுவ , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே , கடும் மழை காரணமாக ஏற்படக்கூடும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளும் முகமாக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.