கோண்டாவில் பகுதியில் 17 வயதான மாணவி ஒருவர் 21 வயதான காதலனுடன் தலைமறைவாகியுள்ளார். தன்னை தேட வேண்டாம் என்றும் தான் தனது காதலனுடன் வாழப் போவதாகவும் அத்துடன் அவருடன் வாழ்ந்து கொண்டே ஏ.எல் பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறு பெறப் போவதாகவும் குறித்த மாணவி தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது வயது தொடர்பாக பொலிசாரிடம் தெரிவித்து தன்னையும் காதலனையும் பிரிக்க முற்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பிரபல பெண்கள் பாசாலையில் கற்று வந்த குறித்த மாணவி க.பொ.தர சாதாரணப் பரீட்சையில் 7 பாடங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவியின் காதலனின் குடும்பத்தினருடன் மாணவியின் பெற்றோர் தொடர்பு கொண்டு மாணவியை காதலனிடமிருந்து பிரித்து தம்முடன் கூட்டிச் செல்ல முற்பட்ட போதும், காதலனின் பெற்றோர் மறைந்திருக்கும் தனது மகனிடம் தொலைபேசியில் கதைத்து மாணவியை பெற்றோருடன் அனுப்புமாறு கேட்ட போதும் காதலன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அம் முயற்சி கைகூடவில்லை.