நம்மை அறியாமல் செய்யும் சில நல்ல செயல்கள் நம் தோக்ஷங்களை அழிக்கும்

நம்மை அறியாமல் நாம் செய்யும் சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விலக்கி நமக்கு நன்மை செய்வனவாகவே அமைந்துள்ளன.

படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .

அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சாலச்சிறந்தது. இது நமக்கு சந்திரனின் ஆசிகளை கொடுப்பதோடு புகழையும் பெற்று தரும் .

வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனிபகவானின் ஆசிகள் கிடைக்கும் அதோடு நாம் செய்யும் இந்த செயலால் நம் ஆயுள் விருத்தி அடையும்.

ஆசிரியர்கள் ,வேதம் படித்த பண்டிதர்கள், புரோகிதர்கள் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்குவதும் , புண்ணிய யாத்திரைக்கு செல்ல இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுதும் ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவதாலும் நமக்கு குருவின் ஆசிகள் கிடைக்கும் .

சிதிலம் அடைந்த கோவில்களில் நீர்நிலை உண்டாக்குதல் மற்றும் , தண்ணீர் தொட்டி அமைத்தல், போன்ற காரியங்களை செய்யும்போது நமக்கு தேவதைகளின் ஆசிகள் கிடைக்கும்.

சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பதால் சூரியபகவானின் ஆசிகள் நமக்கு கிடைப்பதோடு நல்ல ஆரோக்கியமும் வம்ச விருத்தியும் ஏற்படும்.

திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தால் செவ்வாயின் ஆசி கிடைக்கும்.

ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தால் புதனின் ஆசி கிடைப்பதோடு சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி ) போன்ற தொல்லைகளை நீங்கி நமக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் — இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்த்தால் ராகு -கேதுவின் ஆசி கிடைக்கும்.

பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,வெல்லத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இதனால் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி தேவர்கள் அளிப்பார்கள்