வெடித்து சிதரும் மொபைல் போன்.. காரணம் தெரியுமா?

இன்றைய உலகில் செல்போனை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கவர்ந்து வருகிறது செல்போன்கள்.

நவீன காலத்தில் அனைவரும் தொலைதொடர்பில் விரைவாக செய்தியை அனுப்ப செல்போனில் இருக்கும் வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் இன்னும் பல வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் செல்போன்கள் சில நேரங்களில் பயன்படுத்தும் போது வெடித்துச் சிதறுவதை கேள்விப்பட்டு இருப்போம். சாப்பிடும் போது, தூங்கும்போது, பைக் ஓட்டும்போதும் செல்போன்கள் வெடிக்கின்றன. இதனால் செல்போன்கள் சூடாகிவிட்டால் வெடித்துவிடுமோ என்ற பயம் வரத்தான் செய்யும்.

இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட மொமைல்போன்கள் வெடித்து சிதறுகின்றன என ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் தானாம். எப்படி மொபைல்போன் வெடிக்கிறது என்பதை பார்ப்போம்.

பேட்டரியின் திறன் பொருத்து
  • செல்போன்களில் முதலில் வெடிப்பதற்கு காரணம் மொபைல் பேட்டரிகள் தான். அதற்கு காரணம், வைத்திருக்கும் செல்போனுக்கு தகுந்த பேட்டரிக்களையோ, சார்ஜரையோ பயன்படுத்தாமல் இருப்பதுதான்.
  • பேட்டரியின் திறன் அனைத்து செல்போனிற்கும் மாறுபட்டு தயாரித்து இருப்பார்கள். அதனால் தான் மொபைல்போன்கள் வெடிக்கின்றன.
சரியான சார்ஜரை பயன்படுத்தாமல்
  • பேட்டரிகள் அந்தந்த சார்ஜரில் வோல்ட்டின் மதிப்பு மாறுபடும். ஒரிஜினல் சார்ஜரில் இருக்கும் வோல்ட்கள் தான் வைத்திருக்கும் மொபைல் போனிற்கு மட்டும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்ப்பட்டு இருக்கும்.
  • குறைந்த திறன் கொண்ட சார்ஜரை அதிகவோல்ட் இருக்கும் சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரியின் அளவு குறைந்து நீண்ட நேரன் சார்ஜ் நிக்காத நிலை ஏற்படும். இதனால் நிலையற்ற தன்மை ஏற்பட்டு செல்போன் வெடித்து சிதறும்.
சார்ஜ் போட்டு பேசுவது
  • செல்போனில் பேசிக்கொண்டி இருக்கும் போது சார்ஜ் குறைவாக இருப்பதால் சார்ஜரில் போட்டுவிட்டு பேசுவதால் வெடிக்க நேரும்.
  • சார்ஜர் போடு பேசும்போது சிக்னல்கள் அதிகமாக மொபைல் போனிற்கு தேவைப்படும். இதனால் சூடாகும் நிலை உருவாகி வெடிக்கும்.
இண்டர்நெட்
  • செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அழைப்பு வந்தால் அப்படியே பேசுவார்கள். 24 மணிநேரமும் இண்டர்நெட்டை ஆன் (on) செய்து வைத்திருந்தாலோ, அதிகப்படியான அப்ளிகேஷனை பயன்படுத்துவதாலோ வெப்பநிலை அதிகமாக செல்போனில் வரும். அந்நேரங்களில் அழைப்புகளை எடுத்து பேசினால் வெடிக்கும்.

இன்னும் பல காரணங்கள் இருக்கும், ஆனால் நம்க்கு அது பெரும்பாலும் தெரியாமல் இருக்கலாம். இக்கால கட்டத்திற்கு செல்போன்கள் தேவைதான் ஆனால் அதன் பயன்பாடு தேவைபடும் பொழுதுதான் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பான முறைகளில் செல்போனை பயன்படுத்துவது நல்லது.