ஒன்றாக சேர்ந்து வந்து எருமை மாடுகளை மிரட்டிய சிங்க கூட்டத்தை தனி ஒருவனாக துணிச்சலாக முன்னேறி சிங்க கூட்டத்தை ஓட விட்ட எருமை மாடு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவின் Zambia பகுதியில் உள்ள Luangwa தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர்.
இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் சில விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் இது போன்று விலங்குகளைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள், உதவியாளருடன் ஜீப்பில் சென்றுள்ளனர்.
அப்போது தான் இந்த அரிய வகை காட்சி சிக்கியுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் ஒரு கட்டத்தில் ஒரு இடத்தில் புழுதி பறக்க ஓடி வருகின்றன.
இதைக் கண்ட சிங்கக் கூட்டம் ஒன்று அந்த எருமை கூட்டங்களை மிரட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றன. சிங்கத்தை கண்டவுடன் சில எருமை மாடுகள் ஓடி விட்டன.
ஒரு சில எருமை மாடுகள் அந்த சிங்க கூட்டத்துடன் சண்டை போட்டன. அந்த நேரத்தில் ஒரு எருமை மாடு மாட்டும் பயமின்றி சிங்கககூட்டத்தை நோக்கி விரட்ட ஆரம்பித்தது.
இதனால் பயந்து போன சிங்கக் கூட்டங்கள், முதலில் அந்த மாட்டை மிரட்டிப் பார்த்தது. ஆனால் அந்த மாடோ தன்னுடைய கொம்பை வைத்து தொடர்ந்து மிரட்டியதால் சிங்கக் கூட்டங்கள் ஒரு கட்டத்தில் ஓடி விட்டன.