பிரித்தானியா – லண்டன் நகரில் நேற்று இரவு 6 பேர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் நகரின் வெவ்வேறு நான்கு இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 90 நிமிடங்களில் ஆறு பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது தாக்குதல் சம்பவம் மாலை ஆறு மணிக்கு Mile End பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஒரு மணி நேரத்தில் East India Dock பகுதியிலும், அடுத்த சில நிமிடங்களில் Newham பகுதியிலும் கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.