யாழ் கோப்பாயில் மனைவியைக் கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிபதி சி.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டார்.
குடும்பத் தலைவர் ஒருவர் அவரது மனைவியைத் தாக்கியமையைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.
அம்முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனைக் கைது செய்த பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே அவருக்கு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இக்குடும்பத் தலைவர் இதற்கு முன்னரும் மதுபோதையில் அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக இரு முறை அவரது மனைவியால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கணவன் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார்.