மத்திய கிழக்கு நாடான சார்ஜாவில் இலங்கையர்களுகாக ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வில் முகம் சுளிக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கையர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் இறுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இசை நிகழ்ச்சி ஆரம்பிப்பத்தில் ஏற்பட்ட தாமதத்தினால், அங்கிருந்த பல இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது. மேடை மற்றும் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படத்தியுள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பணம் சேகரித்துள்ள நிலையில், இறுதியில் சட்ட அனுமதி பெறாமையினால் இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இலங்கையர்கள் கோபமடைந்து அவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.