தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத காரணத்தினால் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). சென்னையில் பணிபுரிந்து வரும் இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயா (27) என்ற பெண்ணை மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் ஏதேனும் பொது நிகழ்வுக்கு சென்றால் அங்கிருக்கும் உறவினர்கள் என்ன ஒன்றும் இல்லையா? என்று கேள்வி கேட்டு வந்துள்ளனர்.இதனால், தம்பதியினர் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். ஆனால் அதுவும் அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தொடர்ந்து குழந்தையைப் பற்றிய பேசியதால், விரகத்தி அடைந்து மிக மன வருத்ததில் இருந்துள்ளனர்.
குழந்தையின்மையை எதிர்கொள்ள முடியாத ஏக்கம் காரணமாக மன உளைச்சலில் இருந்த இருவரும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.