முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.இன்று பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன இன்று அம்மன் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் வந்திருந்த நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டமையும் காணமுடிந்தது ஒவ்வொரு வருடமும் இவ்வாறான அற்புதங்கள் அம்மன் ஆலயத்தில் நிகழ்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.