அமெரிக்காவின் உல்ட்ரா நகரில் யுவதியொருவரைக் கடத்தி செல்லப்பிராணியாக வைத்திருந்த நபரொருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.ரேமன் பேர்க் என்ற 38 வயதான குறித்த நபர், 17 வயதான யுவதியொருவரையே கடத்தி அடிமையாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பராயமடையாத சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டிருந்தமை, கூரிய ஆயுதத்தால் தாக்கியமை, கடத்தியமை என்பனவற்றின் கீழேயே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.மரிகோபா கவுண்டியில் வைத்தே அவ் யுவதி கடத்தப்பட்டுள்ளார்.
அவ் யுவதி சமூகவலைத்தளமொன்றில் தான் தனியாக இருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைப் பார்த்த பேர்க்இ தான் அவரை அழைத்துச்சென்று இரு நாட்களுக்கு தனியாக இருக்கலாம் எனக்கூறி அவரை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார்.
பின்னர் அவரை வீட்டுக்கு கொண்டுச் சென்று, கட்டிலில் கட்டி வைத்து பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் தாக்கியுள்ளார்.இந்நிலையில், பேர்கின் நண்பர் ஒருவர் ஊடாக சமூகவலைதளத்தில் தனது நிலையைக் கூறி, பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்தே பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்து, அவ் யுவதியை மீட்டுள்ளனர்.