அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஹொட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் எனும் நிறுவனம், 2021ஆம் ஆண்டு விண்வெளி ஓட்டல் ஒன்றை திறக்க உள்ளது. இந்த ஓட்டலில் தங்குவதற்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஏற்கனவே இந்த ஓட்டல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஓட்டலில் தங்க முன்பதிவுத் தொகையாக 51 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
மேலும் இங்கு ஆறு பேர், 12 நாட்களுக்கு தங்குவதற்கு சுமார் 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை, கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘‘Space 2.0’ மாநாட்டில் ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது ஆறு பயணிகள் உட்பட எங்கள் குழுவைச் சேர்ந்த இருவர அனுமதிக்கப்படுவார்கள். மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
விண்வெளியில் மிதந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. புவியிலிருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம். இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளது. 12 நாட்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும் என்றார்.
குறித்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியப் பணமதிப்பின் படி சுமார் 61 கோடி ரூபா செலவாகும். மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு என்கிறார்கள் மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.