தாறுமாறான உறவுமுறை! விளைவு?

அவுஸ்திரேலியாவில் முறையற்ற பாலுறவுப் பழக்கங்களின் விளைவாக உடல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளைக் கொண்ட காட்டுவாசிகளைப் போன்ற ஒரு குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1970களில் நியூஸிலாந்திலிருந்து Tim மற்றும் June Colt என்னும் பெயர்களைக் கொண்ட ஒரு அண்ணனும் தங்கையும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பாலுறவுப்பழக்கங்களின் விளைவாக பல குழந்தைகள் பிறந்தன.

அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஒவ்வொருவரும் இன்னொருவருடன் அண்ணன் தங்கை என்ற உறவு முறையே இல்லாமல், சிலர் விரும்பியும் சிலர் கட்டாயத்தின் பேரிலும் பாலுறவுப் பழக்கங்களை மேற்கொண்டனர். இதன் விளைவாக பல குழந்தைகள் பிறந்தன.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகி சுமார் 40 ஆயிற்று. அண்ணன் தங்கை போன்ற நெருங்கிய உறவு முறைகளுக்குள் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு உடற்குறைபாடுகளுடன் பிறக்கும்.

அவ்வகையில் இந்த “குடும்பத்திலும்” தவறான உறவு முறைகளின் விளைவாக முக குறைபாடுகள், சரியாக பேச முடியாமை, காது கேளாமை, மாறுகண் போன்ற பல குறைபாடுடைய குழந்தைகள் பிறந்துள்ளன.

இத்தனை ஆண்டுகளாக இப்படி ஒரு குடும்பம் இருந்ததே உலகத்திற்கு தெரியாத வகையில் இந்தக்குடும்பம் அவ்வப்போது இடம் மாறிக்கொண்டே இருப்பது வழக்கம்.

அப்படி இடம் மாறி ஆறு ஆண்டுகளுக்குமுன் New South Wales பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அந்தப்பக்கம் உள்ள மரங்களிடையே விளையாடச் சென்ற ஒரு சிறுமி ஏதோ பேச்சு சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கப் போயிருக்கிறாள்.

அங்கே ஒரு சிறுமி இன்னொருவரிடம் தனது அக்கா கர்ப்பமாக இருப்பதாகவும் அந்த கர்ப்பத்திற்கு அண்ணன்களில் யார் காரணம் என்று தெரியவில்லை என்றும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் வந்து சொல்லியிருக்கிறாள்.

அவளது பெற்றோர் இது குறித்து பொலிசில் தெரிவிக்க பொலிசார் அந்த சிறுமி குறிப்பிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வு மேற்கொள்ளச் சென்ற பெண் அதிகாரிகளில் ஒருவர் அதிர்ந்துபோய் தான் கண்டதை சாகும் வரை தன்னால் மறக்க இயலாது என்று கூறுமளவிற்கு மோசமாக அந்த குடும்பம் காணப்பட்டுள்ளது.

பல் விளக்குவது, குளிப்பது, டாய்லட் பேப்பர் உபயோகிப்பது என்று எந்த விடயங்களுமே தெரியாமலிருந்த பல குழந்தைகளை, சிறுவர்களை பொலிசார் மீட்டு காப்பகங்களுக்கு அனுப்பினர்.

அண்ணன் தங்கை, அப்பா மகள் என்ற உறவு முறையே இல்லாமல் முறைகெட்டு யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்னும் நிலைமையில் வாழ்ந்த அந்த குடும்பம் குறித்த தகவல்கள் வெளியே வர, உலகமே அதிர்ந்தது.

பொலிஸ் விசாரணையில் அந்தக் குடும்பத்திலும் ஏராளமானோர் விருப்பத்திற்கு மாறாக தங்கள் தந்தை அல்லது அண்ணன் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

New South Wales நீதிமன்றம் குழந்தைகள் அனைத்தையும்அந்தக் குடும்பத்திலிருந்து நிரந்தரமாக அகற்றியுள்ளதோடு இனி அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தோடு எப்போதுமே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவெடுத்ததோடு மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறாக இந்த தீர்ப்பை உலகத்திற்கு தெரியும் வகையில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது.