“ ரணில் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே இணங்கினார் ”

புலம்பெயர் தமிழர்களை திருப்திப் படுத்துவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளிற்கு இணங்கினார் என முன்னாள் கடற்படை அதிகாரி சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையை சமஸ்டி நாடாக மாற்றும் புதிய அரசமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்துள்ளது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தந்திரோபாயங்கள் நாட்டை பிளவுபடுத்தி விடும் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ்தேசியகூட்டமைப்பின் தந்திரோபாயங்களிற்கு இணங்குவதன் மூலம் பிரதமர் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களித்ததன் மூலம் பிரதமரிற்கும் அவர்களிற்கும் இடையிலான நட்பின் வலிமை வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி என தெரிவிப்பது வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.