பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த முகமது நபிகளின் வம்சாவளி என்ற வரலாற்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பான ஆய்விற்கு ராணி எலிசபெத்தின் 43 தலைமுறையினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான தகவல்கள் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகியிருந்தன, அதில் ராணி எலிசபெத் முகமது நபியின் மகள் பாத்திமாவுக்கு இரத்த உறவு என செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது இந்த ஆய்வறிக்கைக்கு பின்னணியில் உள்ள இரகசியம் பிரித்தானியாவில் உள்ள சிலருக்கு மட்டுமே தெரியும் எனவும் இந்த நிகழ்வு இஸ்லாமியர்களுக்கு பெருமையான ஒன்று எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பிரித்தானியாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.