மாணவி மீது ஆசிரியை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவியைத் தாக்கியமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்கு சமூகம் அளிக்காது நேற்றுப் பாடசாலைக்குச் சென்றபோது ஆசிரியர் இவ்வாறு கடுமையாக தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் உடலில் கடுமையான தழும்புகள் காணப்பட்டமையை அடுத்து சிறுமி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

001  முல்லைத்தீவில் மாணவி மீது ஆசிரியை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்) 001003-1  முல்லைத்தீவில் மாணவி மீது ஆசிரியை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்) 003 1

004  முல்லைத்தீவில் மாணவி மீது ஆசிரியை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்) 004