யாழில் வசமாக சிக்கிய பெண்!

யாழ்ப்­பாண நக­ரில் நகைக் கடை­கள் பல­வற்­றில் நகை­க­ளைத் திரு­டிய குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்ட பெண் நகைக்­கடை ஒன்­றில் வைத்து நேற்று மடக்­கப்­பட்­டார்.

கண்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று கூறப்­ப­டும் அவ­ரைக் கடைக்­குள் பூட்டி வைத்­துப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் கஸ்­தூ­ரி­யார் வீதி­யில் உள்ள நகைக்­கடை ஒன்­றில் நேற்­று­மாலை 4.30 அள­வில் இடம்­பெற்­றது.

சில மாதங்­க­ளாக நகைக்­க­டை­க­ளுக்கு வரும் குறித்த பெண் நகை­க­ளைக் கொள்­வ­னவு செய்­வது போல பல நகை­க­ளை­யும் பார்­வை­யி­டு­வார்.

பின்­னர் அவற்­றில் ஒன்­றா­வது காணா­மல் போய்­வி­டும். இவ்­வாறு பல கடை­க­ளில் திருட்­டுப் போனமை தெரி­ய­வந்­தது.

இது தொடர்­பில் ஏனைய நகைக்­க­டைக்­கா­ரர்­க­ளுக்­கும் புகைப்­ப­டத்­து­டன் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் சுமார் 40 வயது மதிக்­கத்­தக்க குறித்த பெண் கஸ்­தூ­ரி­யார் வீதி­யி­லுள்ள நகைக்­கடை ஒன்­றில் நேற்­றுத்­தி­ருட முற்­பட்­ட­போது அவர் கையும் மெய்­யு­மா­கப் பிடி­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

குறித்த கடை­யில் கடந்த பெப்­ர­வ­ரி­யி­லும் திருட்டு இடம்­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர் தப்­பி­யோ­டா­த­வாறு கடைக் கத­வு­கள் மூடப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அத­னால் அந்­தக் கடை­யின் முன்­பாக ஏரா­ள­மா­னோர்­ கூடி வேடிக்கை பார்த்­த­னர். பின்­னர் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். விசா­ரணை நடத்­து­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.