நினைத்த காரியங்களில் வெற்றி பெற குபேர முத்திரை!

வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.

செய்முறை:

பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு விரல்களும் மடித்து உள்ளங்கையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள். சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம்.அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.

எவ்வளவு நேரம்?

*குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என ஒரு நாளில் மூன்று முதல் நான்கு தடவைகள் வரை செய்யலாம்.

*ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரை செய்யலாம்,அதற்கு மேல் வேண்டாம்.

*ஆல்பா மைண்ட் கண்ட்ரோல் முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய (உதாரணமாக ஒரு துணி வாங்கச் செல்கையில் விரும்பிய நிறத்தில் துணி அமைய, டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யச் செல்லும் போது டிக்கெட் கிடைக்க என சிறு சிறு அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம் இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு சில நிமிடங்கள் செய்தாலே போதுமானது.

எப்படி வேலை செய்கிறது?

பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் இணைக்கும் போது கீழ்காணும் நிகழ்வுகள் நடை பெறுகிறது.

*நெறுப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மூன்று பஞ்சபூதங்கள் தூண்டப்படுகின்றன.

*மனிபூரகச் சக்கரம், அனாஹதம், விஷுதி, ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகிண்றன.

*செவ்வாய்,குரு(வியாழன்), சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள் அதிக அளவில் உடலினுள் கிரகிக்கப்படுகின்றன.

*இந்த மூன்று விரல்களோடு இணைக்கப் பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள் தூன்டப்படுகின்றன. இத்தனையும் நிகழும் போது, நமது ஆழ்மனம்(Sub consious mind) விழித்தெழுகிறது. நாம் எதை வேண்டுமென தீவிரமாகச் சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம் ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் துவங்கும் போது இந்தத் தொழில் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முகமாக தீவிரமாகச் சிந்தித்தபடி குபேர முத்திரையைச் செய்யும்போது அந்தச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.


ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து விட்டால் அதைச் செயலாக்கும் வழிமுறைகளை உங்களது உள்ளுணர்வு உங்களுக்குக் காட்டிக் கொண்டேயிருக்கும்.நாம் உறங்கும் போதும் கூட ஆழ்மனது உறங்குவதுயில்லை.அதில் விதைக்கப்பட்ட சிந்தனையைச் செயலாக்குவது எப்படி என திட்டங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கும்.

ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம், போன்ற கலைகளும் இதையே செய்கின்றன, நமது புற மனதை (Consious Mind) ஹிப்னாடிசம் மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில் எண்ணங்களை விதைப்பதே ஹிப்னாடிசத்தின் அடிப்படை.

குபேர முத்திரையில் எந்தவிதமான மந்திரமும் கிடையாது. நமது எண்ணங்களை ,விருப்பங்களை நமது ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர முத்திரை!

பலன்கள்:

*நினைத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.

*வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.