இன்றைய ராசிபலன் (09/04/2018)

 

  • மேஷம்

    மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு.  வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • தனுசு

    தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நிம்மதியான நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.