தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியில் சார்க் அமைப்பை முன்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என நேபாள பிரதமர், மோடியிடம் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி, இந்தியப் பிரதமரை இன்று சந்தித்துள்ளார்.
இதன்போது, பாகிஸ்தான் எல்லை ஊடாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியே மோடி மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிந்த சார்க் மாநாடு, இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சார்க் மாநாட்டை நடத்துவதற்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு பாகிஸ்தான் பிரதமர் செய்ட் ககான் அபாஸி கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அந்நாட்டு பிரதமரிடமும் குறித்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை நேபாள பிரதமர் சர்மாவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்துள்ளார்.