தமிழர்களின் தாயக பிரதேசத்தில் பிரதான நகரமாக யாழ்ப்பாணம் விளங்குகிறது.
அதற்கு அடுத்தபடியாக சமகாலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக கொழும்பு வெள்ளவத்தை உள்ளது.
குட்டி யாழ்ப்பாணம் என்ற செல்லப் பெயர் கொண்டு வெள்ளவத்தை அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளவத்தை நகரம் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இன்று வளர்ச்சியடைந்த பாரிய நிர்மாணத் தொகுதிகளுடன் வெள்ளவத்தை காணப்பட்ட போதும், அன்றைய காலத்தில் எவ்வாறு இருந்து என்பது தொடர்பில் பலருக்கு தெரிந்திருக்காது.
வெள்ளவத்தையின் பிரதான பகுதிகளை மையமாக கொண்டு இந்த அரிய வகை காணொளி வெளியாகி உள்ளது.