தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சொந்த சகோதரியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சங்கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தயார் மற்றும் தம்பி சரவணனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டதில், சரவணன் தாக்கி சங்கீதா இறந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் அடைத்து, கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டில் வைத்து எரித்துள்ளார்.
சங்கீதாவை கொலை செய்ததை அவரது மகள் நேரில் பார்த்து தமது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிசாருக்கு அளித்த புகாரின் பேரில் சரவணனை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், தம்மை மன நலம் பாதித்தவர் என தமது சகோதரி கூறியதாலையே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.