மனைவி என்பவர் திடப்பொருளோ அல்லது சொத்தோ கிடையாது. தான்விரும்பினாலும் மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இருவரும் ஒன்றாக வாழமுடியும்.
மனைவிக்கு விருப்பமில்லாதபட்சத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி சேர்ந்துவாழ வலியுறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் வேலை பார்க்கும் நன்குபடித்த கணவன்- மனைவி இடையேயான பிரச்சனை ஒன்றிற்குத்தான் உச்சநீதி மன்றம் இவ்வாறு தெரிவித்திருக்கிறது.
கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து தேவை என்றும் அதற்கு கணவர் சம்மதிக்க மறுப்பதாகவும் சம்பந்தப்பட்ட பெண் மனுதாக்கல் செய்திருந்தார்.
இருவருக்கும் இடையே சமாதானம் பேச ஒரு குழுவை உச்ச நீதிமன்றம்ஏற்படுத்தியது. இருவரும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
நீதிபதிகள் மதன் பி லோக்குர் , தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில்வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனைவி தரப்பு வழக்கறிஞர்கள் கணவர் மீது கொடுத்த புகார்களை வாபஸ்பெற்றுக் கொள்கிறோம், ஆனால் அவருடன் சேர்ந்து வாழ மனுதாரரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று வாதிட்டனர்.
கணவர் தரப்பு வக்கீல்கள் வாதாடும்போது “மனைவி என்பவர்திருமணத்திற்குப் பின் கணவருக்குத் தான் சொந்தம். மனைவிக்கு விருப்பம் விருப்பம்இல்லாவிட்டாலும் அவர் கணவருடந்தான் வாழ வேண்டும் அதற்கு சமாதானம் பேசி நீதி மன்றம்உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ,
மனைவி என்பவர் ஒரு திடப் பொருள் கிடையாது. திருமணம் செய்து கொண்டதால்அவர் கணவரின் சொத்து கிடையாது. ஆகவே இவரை சொத்தாகவும் கருத முடியாது. கணவருக்குவிருப்பம் இருந்தாலும் மனைவிக்கு விருப்பம் இல்லாத போது அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் ஒன்றாக வாழ விருப்பமில்லாத ஒரு பெண்ணை எப்படிக் கட்டாயபடுத்திவாழ வைக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினர்.
அந்தப் பெண்ணின் கணவர் அவரை ஒரு திடப்பொருள் போன்றும் தனக்குஉரிமைப்பட்ட ஒரு சொத்தை நடத்துவது போல நடத்தியுள்ளார். மனைவி என்பவர் சொத்துகிடையாது, ஆகவே இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்என்று நீதிபதிகள் கூறினர்.