பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் என்ற படத்தில் நடித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு பாதுகாப்பு கருதி சிறையில் அவர் தனி அறையில் தங்க வைக்கப்பட்டார்.
வியாழக்கிழமை அன்று இரவு வழங்கப்பட்ட உணவை சல்மான் மறுத்துவிட்டார், அடுத்து வெள்ளிக்கிழமை காலையும் சாப்பிட மறுத்துவிட்டார், காரணம் அந்த உணவு தனக்கு ஏற்றுக்கொள்ளாது என்று அவர் பதில் அளித்துள்ளார்.
இதன் பின்னர் மூன்று வேளை சாப்பிடாத சல்மான் கான் வெள்ளியன்று தனது தங்கைகள் மற்றும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை சந்தித்த பிறகு மதியம் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒர்க்அவுட் செய்துள்ளார்.
மூன்று வேளை சாப்பிடாமல் இருந்த சல்மான் தனது அறையில் 3 மணிநேரம் ஒர்க்அவுட் செய்ததை பார்த்து பொலிசார் வியந்துள்ளனர்.
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் அல்லது இரவு 2 மணி ஆனாலும் ஒர்க்அவுட் செய்யாமல் தூங்கப் போக மாட்டார் சல்மான் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இறுதியாக வியாழன் மற்றும் வெள்ளி சாப்பிடாமல் இருந்த சல்மான் நேற்று ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.