தொடர் சாதனைக்கு முற்றுபுள்ளி வைத்த இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி!

ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்று சாதித்தது.

2வது அணி:
21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 4வது நாளான நேற்று பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளது.

4 முறை காமன்வெல்த் போட்டியில் தொடர் வெற்றி பெற்ற சிங்கப்பூர் அணியை, இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.