பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகள் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜை அறையில் வைப்பார்கள்.தெய்வ சிலைகள் வீட்டில் உ மிகவும் நல்ல விஷயம். அதிலும் குறிப்பிட்ட 3 சிலைகளை உங்கள் வீட்டில் வைப்பதன் மூலம் உங்களிற்கு அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் கிடைக்கும். அவை,
மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
ஆல மரம், மா மரம் அல்லது வேப்ப மர மரத்தாலான விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இதகைய சிலையை வீட்டில் வைத்திருந்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
பூஜை அறையில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற சிலையை வைத்திருப்பது மிகவும் நல்லது நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது. ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.