கர்நாடகாவில் தனது தாயின் 100 வது பிறந்தநாளை கொண்டாட கனடாவில் இருந்து வந்த 75 மகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடாகாவில் வசித்து வந்துள்ளார் Gladys D’Souza. இவர் இன்று தனது 100 வயதினை எட்டியுள்ளார்.தனது தாயின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்தற்காக இவரது மகள் Gloria கனடாவில் இருந்து வந்துள்ளார்.
சுமார் 11 மணியளவில் கேக் வெட்டப்பட்டது, அப்போது அனைவரும் சந்தோஷத்தில் பிறந்தநாள் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கையில் Gloria திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.உடனடியாக மருத்துவரை வரவழைத்து அவரை சோதனை செய்து பார்த்ததில், Gloria இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். Gloria – க்கு ஏற்கனவே உடல்நலக்குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
தனது மகளின் இறப்பால் பிறந்தநாள் வீடு சோகத்தில் மூழ்கியது, தற்போது Gloria- யின் உடல் விமானத்தின் மூலம் கனடாவிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இறுதிசடங்கு நடைபெறவிருக்கிறது.