திடீரென தாழிறங்கிய நிலம்! மக்கள் அச்சம்!

இலங்கையின் சில பகுதிகளில் நிலம் திடீரென தாழிறங்கியமையால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் திடீரென சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன.

கண்டி, சுதுஹும்பொல விலியம், கொப்பல மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு தாழிறங்கியுள்ளன.

அந்தப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

2 வர்த்தக நிலையங்கள் மற்றும் 3 வீடுகள் திடீரென தாழிறங்கியுள்ளன.

அனுமதியற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களே இவ்வாறு தாழிறங்கி உள்ளதாக கண்டி நகர ஆணையாளர் சந்தன தென்னகோண் தெரிவித்துள்ளார்.