பதவியிலிருந்து மகிந்தவை நீக்க நடவடிக்கை: கொழும்பு ஊடகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அமைச்சர் மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரினதும் பதவிகளை பறிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, சக்திவாய்ந்த மக்கள் அமைப்பாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த 16 பேரும் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது