சிக்கிய புதிய அமைச்சர்கள்?

வடமாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களும் அமைச்சு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் போலியான விபர ங்களை சமர்பித்து சம்பளம் பெற்றுக் கொண்டுவிட்டு, பழைய நிரந்தர ஊழியர்களை கொண்டே பணிகளை நிறைவேற்றுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ் வரனுக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு 15 தனிப்பட்ட ஊழியர்களும் அமைச்சர்களிற்கு 10 ஊழியர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட தொகை ஊழியர்களுன் எண்ணிக்கைக்கு முழுமையாக பதிவு செய்யப்பட்டு சம்பளம் பெறப்படுகின்றது.

இருப்பினும் முதலமைச்சரின் தனிப்பட்ட அலுவலகத்தில் 15 ஊழியர்களும் பிறிதொரு அமைச்சரின் அலுவலகத்தில் 10 ஊழியர்களும் பணியாற்றுகின்றபோதும் ஏனைய 3 அமைச்சர்களின் அலுவலகத்திலும் குறித்த எண்ணிக்கை ஊழியர்கள் பணியாற்றதா நிலையில் 10 பேரின் பெயர்கள் பதியப்பட்டு சம்பளம் மட்டும் வெளியில் எடுக்கப்படுகின்றமை தற்போது தெரியவந்துள்ளது.

இதில் ஓர் அமைச்சரின் அலுவலகத்தில் 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இன்னுமோர் அமைச்சில் 8பேர் படியாற்றுகின்றதோடு மறு அமைச்சில் வீட்டில் பணியாற்றுபவர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கும் அப்பால் அமகச்சர்களின் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்திய தனிப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.

இவை தொடர்பில் ஆராய்ந்தவேளையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்த்து.

ஓர் அமைச்சரின் அலுவலகத்தில் 10 பணியாளர்கள் உள்ளதாக சம்பளப்பட்டியலில் உள்ள நிலையில் அவரது தனிப்பட்ட அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு குறித்த அலுவலருடன் உரையாட வேண்டும் எனக் கோரினால் அவ்வாறு ஓர் ஊழியரே இங்கு பணியாற்றவில்லை எனப் பதிலளிக்கின்றனர்.

இதேநேரம் அதே அமைச்சர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அவர்களது வங்கி கணக்கில் வைப்புச் செய்யும் நிலையில் ஊழியர்களிற்கும் அமைச்சரிற்கும் கூட்டுக்கணக்கு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேபோன்று வாகனமே இன்றி ஒர் அமைச்சர் 75 ஆயிரம் ரூபா வாடகைப் பணம் பெறுகின்றதாக கூறப்படுகின்ற நிலையில் அவ்வாறான வாகனமே இல்லை என்பதோடு அமைச்சின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இயங்கும் அமைச்சரின் அலுவலகத்திற்கும் வாடகைப்பணம் அறவிடப்படுகின்றது.

இதேபோன்று மறு அமைச்சரோ இல்லாத நபர்களின் பெயர்களிற்கு சம்பளத்திற்கு அப்பால் தனது மகளின் பெயரிற்கும் குறித்த சம்பளப் பட்டியலில் சம்பளம் இடப்படுகின்றபோதும் இன்றுவரை ஒரு நாள்கூட அவரது மகள் அலுவலகத்தில் பணியாற்றியதே கிடையாது.

ஆனால் தனது படி இயங்குவதாக காண்பிப்பதற்காக அமைச்சின் ஊழியர்கள் இருவரை தனது அலுவலகத்தில் வைத்து பணிபுரிகின்றார்.

இவ் ஊழியர்களிற்கு அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர் சம்பளம் அன்றி அமைச்சின் சம்பளமே இன்றுவரை வழங்கப்படுகின்றது.

இவை அனைத்தும் தொடர்பாக தற்போது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த அமைச்சரிடமே தொடர்புகொண்டு விளக்கம்கோரியபோது தவறான தகவல் எனப் பதிலளித்தார்.

இதனால் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் வினாவியபோது ஊழியர்.கள் பெயரிலும் அமைச்சர்கள் பெயரிலும் கூட்டுக் கணக்கு வைத்திருக்கும் விடயத்திற்கு உடன்னியாக தனிக் கணக்கிற்கு மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவிக்கின்றார்.

இருப்பினும் ஏனைய அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை அறிந்திருக்கவில்லையாம். அவ்வாறானால் முன்பு இருந்த அமைச்சர்கள் ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டனர் என நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அமைச்சர்களிற்கு என்ன தீர்வு எனவும் இவ்வாறு நேரடியாகவே நிதித் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளாதமை

தொடர்பிலும் கேள்வி எமுப்பப்படுவதோடு இவ்வாறான தகவல்கள் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக செயலாளர்கள் அமைச்சரின் உத்தரவிற்கு ஊடகங்களிற்கும் வாய்திறக்ககூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.