கடந்த 2 ஆம் திகதி புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த இளைஞன் இன்னுமொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது, வீதியின் ஊடாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்றின் மீது மோதியமையினால் தூக்கி வீசப்பட்ட நிலையில், குறித்த இளைஞன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எம்.பி.சுமித் கிரிஷாந்த என்பவரே காயம் அடைந்து ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும் தான் ஆபத்தான நிலையில் தான் இல்லை என கூறி சிகிச்சை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இருப்பினும் அடுத்த நாள் அவர் ஆபத்தான நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற இளைஞன் கடந்த 6 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் உடற்பாகங்களை தானம் வழங்குமாறு இளைஞனின் பெற்றோரிடம் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய கண்கள், கல்லீரல், சிறுநீரகம், முழங்கால், பாத தசைகள், தசைகள் மற்றும் பல பாகங்களை பெற்றோரின் விருப்பத்திற்கமைய வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.இதுவரையில் இளைஞனிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட உடற்பாகங்களில் 6 பேர் உயிர் வாழ்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
தச்சு தொழில் செய்து வந்த அவர் திருமணமாகாதவராகும். சகோதரர் சகோதரிகள் 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு சக்தியாக அவரே காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.