இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரும் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்தால் ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்களிடையே சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.