ஆண்களுக்கான எச்சரிக்கை செய்தி!

எல்லாமே இன்டர்நெட் மயமாகிவிட்ட இக்காலத்தில் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட மடிக்கணினிகளைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு.

அரசாங்கமே இலவசமாகத் தரும் அளவிற்கு இதன் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிப் போன நிலையில் லேப்டாப்பை பயன்படுத்துவதால் ஆண்மை குறைவதாக ஆராய்ச்சி முடிவொன்று தெரிவிக்கிறது.

எப்போதுமே ஒரு அறிவியல் சாதனத்தின் மூலம் நன்மையையும் உண்டு தீமைகளும் உண்டு, லேப்டாப் உபயோகப்படுத்தும் அனைவருக்குமே அதன் கதிரியக்கங்கள் மூலம் சில ஆரோக்யப்ரச்னைகள் உண்டு.

அதில் மிக முக்கியமானதாக இருக்கிறது இந்த ஆண்மைக் குறைவு.

ஏற்கனவே புகைபிடித்தல், தூக்கமின்மை, வெப்பமான இடங்களில் வேலை செய்தல், தொடர்ந்து இறுக்கமான ஜீன்ஸ் அணிதல், மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்தல் போன்ற பல காரணங்களுக்காக ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறியிருந்த நிலையில்,

இப்போது லேப்டாப்பைத் தொடர்ந்து மடியில் வைத்து உபயோகிப்பதன் மூலமும் விந்தணு உற்பத்தி குறைபாடுகள் ஏற்படக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

விரைகளின் வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கும்போது விந்தணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்னை ஏற்படும்.

நீண்ட நேரம் லேப்டாப் பயன்படுத்தும்போது அதில் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணமாக இது நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆகவே குழந்தைபேற்றை எதிர்நோக்கி இருக்கும் ஆண்கள் மடிக்கணினியை கவனமாகக் கையாள்வது அவசியம்.

வளர்ந்து வரும் ஆணினம் அனைத்திற்குமே இது ஒரு எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இதனைத் தவிர்க்க, லேப்டாப் பயன்படுத்தும்போது உங்களிடமிருந்து லேப்டாப் சில அடி தூரம் விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

அத்யாவசியமான நேரங்களில் தலையணை ஒன்றை மடியில் வைத்து அதில் லேப்டாபை வைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக வயிறு மற்றும் இடைப் பகுதிக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தபடுகிறது.