இலங்கை யுவதிகளே கவனம்! காதலிக்கு காதலன் செய்த நிட்டூரம்!

காதலியின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய காதலன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காதலனான இளைஞன் அந்த பெண்ணிடமிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தையும் அபகரித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலாபம் வென்னப்புவ பகுதியில் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21வயதுடைய இளைஞனும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தில் ஒரே பிள்ளையான குறித்த யுவதி நீர்கொழும்பில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கற்று வந்தார். இதன்போது குறித்த 21 வயது இளைஞனுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் அந்த யுவதியுடன் பல தடவைகள் பாலியல் உறவை மேற்கொண்டு வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த உடலுறவு காட்சிகளை பல தடவைகள் தனது கைப்பேசியில் வீடியோ படம் பிடித்து பதிவு செய்து வைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்து நிர்வாணப்படங்களை குறித்த யுவதிக்கு காட்டி சமூக வலைத்தளங்களிவ் வெளியிட்ப் போவதாக அச்சுறுத்தி, அப்பெண்ணிடம் பல தடவைகள் பணம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி தமது பெற்றோரின் வங்கி அட்டை மூலமாகவே பணத்தை எடுத்து தனது காதலனான அந்த இளைஞனுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் ஒருநாள் யுவதியின் தாயார் வங்கியில் சென்று தனது கணக்கைப் பரிசீலித்த போது தான் அந்தக் கணக்கில் பணம் இல்லாததை அவதானித்துள்ளார். இது குறித்து மகளிடம் கேட்ட போது அவர் சகல விடயங்களையும் தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து யுவதியின் தாயார் செய்த வென்னப்புவ பொலிஸல் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேக நபரான இளைஞனும் அவரது தந்தையும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அதனை மறைப்பதற்காக வற்புறுத்தலின் பேரில் தான் வங்கியில் பணம் பெற்று வழங்கியதாகவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான இளைஞனையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என அவரது தந்தையையும் பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களினால் யுவதிகள் காதல் விடயத்தில் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.