விடுதலைப்புலிகளின் தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் விடுவிப்பு!

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிர்வாகசேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில் விடுவித்துள்ளது.

இராணுவத்தினர் தங்களது படைகளுக்கான உணவு களஞ்சியமாக இதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணியும் அங்குள்ள கட்டடங்களும் தற்போது, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.