பிரித்தானியாவின் வருங்கால இளவரசி புடவையுடன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பிரித்தானியா இளவரசர் ஹரி, மே 19 ஆம் திகதி மேகன் மெர்க்கல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதனால் பிரித்தானியாவின் வருங்கால இளவரசியாக மேகன் மெர்க்கல் காணப்படவுள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு கிடைக்கவுள்ள திருமண பரிசுப்பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, அதன் மூலம் தேவை உடையவர்களுக்கு கொடுக்கவுள்ளனர். இதற்காக 7 தொண்டு நிறுவனங்களையும் தெரிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஐ.நா சபையுடன் தொடர்புடைய இந்தியாவின் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டு நிறுவனத்தை பார்வையிடுவதற்காக மெர்க்கல் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சமூகம் அளித்துள்ளார்.
பிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்!
இதனடிப்படையில் மெர்க்கல் இந்தியா வந்திருந்தபோது. இந்திய பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.