விமானத்தில் கொசு தொல்லை தாங்க முடியவில்லையாம்!! புத்தகம் வைத்து விரட்டும் பயணிகள்!!-(வீடியோ)

புதுதில்லி: திங்களன்று  லக்னௌவிலிருந்து தில்லி நோக்கி புறப்பட இண்டிகோ விமான நிறுவன விமானம் ஒன்று விமான நிலையத்தில் தயாராக இருந்தது.

பயணிகள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்த பிறகு, அங்கு கொசுதொல்லை அதிகமாக இருந்தது. பயணிகள் தங்கள் கையில் உள்ள அட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு  கொசுக்களை விரட்டியபடி இருந்தனர்.

இந்நிலையில் பயணிகளில் ஒருவரான மருத்துவர் சவுரப் ராய் என்பவர் இது தொடர்பாக விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

கொசுக்களை புத்தகம் வைத்து விமானத்தில் உள்ள பயணிகள் விரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது

விடியோ: