கைதான மஹிந்தவின் சகா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவரை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 லட்சம் ரூபா நிதியை முறையற்ற வகையில் கையாண்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மஹிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரம் பலகை மற்றும் டாம் பலகைகளை வேறுநபர்களுக்கு வழங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினால் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

குறித்த வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தான் கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மஹிந்தானந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக நாளை மஹிந்தானந்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்படக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.