தாய்லாந்தில் மிகவும் உடல் பருமனாக உள்ள நபருக்கும், ஒல்லியாகவும் அழகாகவும் இருக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த நிலையில் கிண்டல்களை பொருட்படுத்தாமல் இந்த ஜோடி வாழ்ந்து வருகிறது.
கூடீ என்ற இளைஞரின் உடல் எடை 120 கிலோ ஆகும். இவரை சுற்றியிருப்பவர்கள் இவரை எப்போதும் கிண்டல் செய்வது வழக்கமாகும்.
இந்நிலையில் புவாடல் என்ற வெறும் 44 கிலோ எடை கொண்ட அழகான பெண்ணுக்கும், கூடீக்கும் இடையில் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கணவர் குறித்து புவாடல் கூறுகையில், அவர் அழகாக இல்லை மற்றும் குண்டானவர் என்பது எனக்கு தெரியும், ஆனால் அவர் அன்பான இதயம் கொண்டவராவார், அது தான் எனக்கு முக்கியம்.

என் மீது அவர் மிகுந்த பாசமாக உள்ளார், நாங்கள் எல்லா விடயங்களையும் ஒளிவு மறைவின்றி ஒருவருக்கொருவர் பேசி கொள்வோம்.
எங்கள் ஜோடியை பலர் கிண்டல் செய்யும் விதத்தில் பேசுகிறார்கள், அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.
