க.பொத. சாதாரண தரத்தில் தோல்வியா…. ?. நீங்களும் பட்டம் பெறலாம்….!! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு………!!

இம்முறை G.C.E(O/L) 2017 பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு;

தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்படவுள்ளது, அது இம்முறை O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2018/2020 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை
( உ+ம்:தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல……) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.

@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்…….)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.

2 ஆம் வருடம்(2 nd year) 1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.

தற்போது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்( UGC) அங்கிகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக் கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக் கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2020 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது
உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக் கழகந்தான் போக முடியா விட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்கலைக் கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப்(Degree) பெற்றுக்கொள்ள முடியும்.
பல்கலைக் கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல… அம்பாறை ஹாட்லி தொழில் நுட்பக் கல்லூரி போன்றவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.