தேசிய அரசாங்கம் முடிவுக்கு வருமா? நாளை முக்கிய தீர்மானம்!!

தேசிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் நாளைய தினம் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் வாக்களித்த காரணத்தினால் தேசிய அரசாங்கத்திற்குள் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அவ்வாறு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வௌியேறி எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருகின்றார்கள்.எனினும், நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஆதரித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பாதுகாக்க அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பெரும் முன்னெடுப்புகளுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.இதில் அரசாங்கத்தை விட்டும் வௌியேறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தேசிய அரசாங்கம் அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

எனினும், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வௌியேறுவதை தடுப்பதற்காகவே இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.