தலைதெறிக்க ஓடிய தென்னிலங்கை அமைச்சர்! நடந்ததென்ன?

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை அச்சறுத்தும் வகையில் தென்னிலங்கையை சேர்ந்த பிரதான அமைச்சரின் சகாக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அங்கிருந்த ஊடகவியலாளருக்கு அஞ்சிய அமைச்சர் தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் கட்சியின் இரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் மாற்றியுள்ளார்.

திருகோணமலையில் இருந்து விசேட விமானம் ஒன்றின் ஊடாக பலாலியை வந்தடைந்த அமைச்சர், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர் பின்னர் அமைச்சர் மாத்திரம் வேறு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ள பிரதான கட்சியின் தலைவரும் அமைச்சருமே இவ்வாறு பயத்துடன் செயற்பட்டுள்ளார்.

கட்சி சார் உயர்பீட உறுப்பினர்கள், வட்டார உறுப்பினர்கள் என நூற்றுக் கணக்கானவர்களை செயலமர்வு என்ற போர்வையில் யாழ்ப்பாணம் நீல திமிங்கிலம் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அங்கிருந்து ஜெட் விங் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த செயலமர்வினை அறிந்த ஊடகவியலாளர்கள், செய்தி சேகரிக்க சென்ற போது, வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் மற்றும் வடக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நியாஸ் ஆகியோரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கமைய ஊடகவியலாளர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து அச்சுறுத்தும் பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில ஊள்ளுராட்சி மன்றங்களின் சபைகளை குறித்த அமைச்சரின் கட்சி பறி கொடுத்த நிலையில், இவ்வாறு அச்சத்துடன் ஒழிந்து திரிவதாக அரசியல் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழத் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து செயற்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவித அமைச்சு பதவிகளையும் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.