டேய் உங்ககிட்ட வீட்டுல பொம்பளைங்க இல்லையா? ட்விட்டரில் குஷ்பு!

நடிகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவரிடம் ட்விட்டரில் திட்டு வாங்கியவர்கள் ஏராளம்.

அந்த வகையில், தற்போது குஷ்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்விட்டரில் ஒரு பதிவினை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு, ட்விட்டரில் குஷ்பூவை பிந்தொடரும் ஒருவர் கூத்தாடி எல்லாம் பியூஷ் கோயல் பற்றி பேசுது என்று கமெண்ட் போட்டார்.

இதைப் பார்த்து, கடுப்பாகிய குஷ்பு தன்னை கூத்தாடி என்று கேலி செய்த நபரை கண்டமேனிக்கு திட்டி தீர்த்துள்ளார்.