ஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 11 ஆக இருந்தபோது ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

201804120054063868_1_3qqj12mq._L_styvpf  ஐபிஎல் போட்டி - டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் 201804120054063868 1 3qqj12mq

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 22 பந்தில் 37 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோஸ் பட்லர் இறங்கினார். பொறுப்பாக ஆடிய ரகானே 45 ரன்களில் அவுட்டானார். பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும், கவுதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி டேர் டெவில்ஸ் சார்பில் ஷபாஸ் நதிம் 2 விக்கெட்டும், போல்ட், ஷமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

மழை விடாததால் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து. டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ்வெல் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். முதல் பந்திலேயே ரன் எடுக்கும் அவசரத்தில் ஓடிய முன்ரோ ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார்.

இருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 34 ஆக இருந்தபோது மேக்ஸ்வெல் 17 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிறிஸ் மாரிஸ் களமிறங்கினார்.

201804120054063868_2_rfojjv2a._L_styvpf  ஐபிஎல் போட்டி - டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் 201804120054063868 2 rfojjv2a

கடைசி இரண்டு ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 5வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்த் 20 ரன்னில் அவுட்டானார். இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். ரன் சேர்க்க முயன்று விரைவில் அவுட்டானார். இதனால் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. இறுதியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் பென் லாபின் 2விக்கெட்டும், உனத்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.