யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளகூடும் என்னும் அச்சத்தில் நபரொருவர் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் என்பவரை, கடந்த 7 ஆம் திகதி மனைவியின் உறவினர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தாக்கியுள்ளதாகவும், மேலும் தொடர்ந்து தாக்குவேன் என மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான நபர், நேற்று முன்தினம் இரவு தன்னை தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். மேலும் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரனின் புகாரின் அடிப்படையில், சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்