கர்நாடக மாநிலம் உடுப்பியில் மருத்துவரின் அலட்சியத்தால் ஒன்பது மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
உடுப்பியைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர்ணா(23). இவரது கணவர் பெயர் சந்தீப். இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
ஒன்பது மாதமான கர்ப்பிணியான ஸ்ருதி உடுப்பியில் உள்ள மருத்துவர் சய்யாவின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆரம்பத்தில் வலி நிவாரண ஊசி போடப்பட்டுள்ளது.
பின்பு பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டு பிரசவத்தின் போது குழந்தை பாதியிலேயே சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்துள்ளனர் மருத்துவர்.
அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும் போது தவறுதலாக பிரதான ரத்தக்குழாயை வெட்டியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அனுபவமில்லாத அப்பெண் மருத்துவர் சய்யாவினால் ரத்த இழப்பை தடுத்து நிறுத்த இயலாத நிலையில் ஸ்ருதி உடனே மரணமடைந்துள்ளார்.
இது போன்று அம் மருத்துவமனையில் நடப்பது இது நான்காவது முறையாம். எதற்கும் இதுவரை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசவத்திற்கு அனுமதித்த ஒன்பது மாத கர்ப்பிணி பெண் இவ்வாறு மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் இன்றும் மக்கள் மத்தியில் ஜீரணிக்க முடியாமல் இருப்பது மட்டுமின்றி, தற்போது விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் வைரலாகி வருகிறது.